புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், உடற்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியை ஊக்குவிக்கவும் நாமக்கல் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
தங்கம் கேன்சர் சென்டர் நடத்தும் நிகழ்வின் முதன்மை பங்குதாரராக வி.ஜி.ஆர். இன்டர்நேஷனல் ஸ்கூல் செயல்படுகிறது. குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி ஊடகப் பங்குதாரராகவும், நாமக்கல் இன்ஃபோ டிஜிட்டல் ஊடகப் பங்குதாரராகவும் இணைந்துள்ளன.
நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் இருந்து காலை 6 மணிக்குத் தொடங்கும் இந்த மாரத்தானில், பல்வேறு வயதுடையவர்கள் பங்கேற்கும் வகையில் 5 கி.மீ., 3 கி.மீ., 2 கி.மீ. மற்றும் 600 மீட்டர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரிசுத் தொகை
ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கம், டி-சர்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், விளையாட்டு மற்றும் உடல்நலனைப் பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில்,
இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்கான பதிவுக் கட்டணம் ரூ.180. கூடுதல் விவரங்களுக்கு 94430 99331 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.